துருக்கி தாக்குதலுக்கு குர்து ஆயுதக் குழு உரிமை கோரியுள்ளது

  • 17 மார்ச் 2016
படத்தின் காப்புரிமை EPA
Image caption துருக்கியின் தலைநகர் அன்காராவில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கியின் தலைநகர் அங்காராவில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் முப்பத்து ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, அந்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான பிகேகே அமைப்புடன் தொடர்புடைய ஒரு குர்து ஆயுதக் குழு உரிமை கோரியுள்ளது.

துருக்கியில் தென்கிழக்கில் உள்ள குர்து பகுதிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த ''டாக்'' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அங்காராவில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று கிடைத்த தகவலினால் அங்குள்ள ஜெர்மனிய தூதரகத்தை மூடியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

இஸ்தான்புலில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகமும் ஜெர்மன் பள்ளிக்கூடமும் மூடப்பட்டுள்ளன.