கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் புதிய கண்காணிப்பு நிலையம்

கிழக்குச் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய சென்ககு தீவுகளுக்குத் தெற்கில் புதிய ரேடார் நிலையத்தை ஜப்பான் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜாப்பான் கண்காணிப்பு மையத்தை அமைத்திருக்கும் சர்ச்சைக்குரிய யோனாகுனித் தீவு.

இந்தத் தீவுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவற்றுக்கு சீனாவும் உரிமை கோரிவருகிறது.

யோனகுனி தீவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய நிலையத்தின் மூலம், தைவானுக்கு அருகில் ஒரு கண்காணிப்பு நிலையத்தை செயல்படுத்தும் வாய்ப்பு ஜப்பானுக்குக் கிடைத்திருக்கிறது.

இதனை ஜப்பானியத் துருப்புகள் காவல்காப்பார்கள். சுற்றியுள்ள பிரதேசங்களைக் கண்காணிப்பதோடு, எந்தச் சூழ்நிலைக்கும் உடனடியாக செயலில் இறங்கும் வாய்ப்பும் இந்த நிலையத்தின் மூலம் கிடைத்திருப்பதாக அந்த நிலையத்தின் தளபதி தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பிராந்தியத்தில் தான் உரிமை கோரும் பிரதேசங்கள் மீதான தன் பிடியை இறுக்க நினைக்கும் சீனாவுக்கு ஜப்பானின் இந்த நடவடிக்கை பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த நிலையத்திலிருந்தபடி, வட கொரியாவிருந்து ஏவப்படும் நீண்ட தூர ஏவுகணைகளையும் கண்காணிக்க முடியும்.