உலகை வலம் வரும் சூரியசக்தி விமானம் கலிஃபோர்னியாவில்

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தரையிறங்கியுள்ளது. பசுபிக் கடல் பகுதியில் மூன்று நாட்கள் பயணித்த பின்னர் இந்த விமானம் அங்கு தரையிறங்கியது.

Image caption உலகை வலம்வரும் சூரியசக்தி விமானம்

ஹவாயிலிருந்து புறப்பட்ட சோலார் இம்பல்ஸ், சான் ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்திற்கு மேலாக பறந்தது.

இந்த விமானத்தின் மெல்லிய மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள கலங்கள் சூரிய ஒளி மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்கின்றன.

போயிங் 747 விமானத்தின் இறக்கையை விட பெரிய இறக்கையை கொண்ட இந்த விமானத்தின் எடை, அந்த போயிங் விமானத்தின் எடையின் நூறில் ஒரு மடங்கிலும் குறைவானது.

உலகை வலம் வரும் முயற்சியை அபுதாபியில் ஆரம்பித்த இந்த சூரியசக்தி விமானம், தற்போது அதன் பயணத்தின் ஒன்பதாவது கட்டத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதமே சோலார் இம்பல்ஸின் பயணம் துவங்கியிருந்தாலும், அதன் மின்கலங்கள் அதிகம் வெப்பமடைந்ததை அடுத்து, திருத்த வேலைகளுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.