பாக்தாத் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலி

  • 17 மே 2016

இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த இரு வெவ்வேறு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் இராக் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தற்கொலை குண்டுத் தாக்குதல் நடந்த அல் ஷாப் பகுதி

ஷியா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் அல்-ஷாப் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சந்தையை இலக்கு வைத்து முதல் குண்டு வெடிப்பு தற்கொலை படை பெண்ணொருவரால் நடத்தப்பட்டது.

மற்றொரு குண்டு வெடிப்பு தெற்கு பகுதியில் உள்ள அல்-ரஷீத் பகுதியின் அருகாமையில் கார் வெடி குண்டு மூலம் நடந்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது தெரியவில்லையென்றாலும், மேற்கூறிய தாக்குதல்கள் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பினரின் கைவரிசையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த வாரத்தில் நடந்த இது போன்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இந்த அமைப்பினர் நூற்றுக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளனர்.