கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ

  • 17 மே 2016

கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கனடாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் காட்டுத் தீ பரவி வருகிறது

அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார்.

ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடையே அந்தப் பகுதியின் வான்பரப்பில் அடர்ந்த மஞ்சள் வண்ணப்புகை பரவி வருவதாகவும், காற்றில் அடர்த்தியாக சாம்பல் உள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபோர்ட் மெக்மர்ரி நகரைச்சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கிருந்து 80,000க்கும் அதிகமான மக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.