ஐ.எஸ் வசமிருந்த ருட்பா நகரத்தை மீட்டது இராக் அரசு

  • 18 மே 2016

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து இராக்கின் மேற்கில் உள்ள ருட்பா நகரத்தை தனது படைகள் மீட்டுள்ளதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

இராக் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் உள்ளூர் பழங்குடியின கூட்டாளிகள் ருட்பா நகரின் மையப் பகுதியில் உள்ள கட்டிடங்களில் தேசியக் கொடியை ஏற்றி இருப்பதாக இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி தெரிவித்துள்ளார்.

ஜோர்டானுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் இந்த நகரம் உள்ளது. மேலும், சிரியாவின் எல்லையில் ஐ.எஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியின் தெற்கே இது அமைந்திருக்கிறது. எனவே, இந்த நகரம் அமைந்திருக்கும் இடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த சில மாதங்களாக, இராக்கின் மேற்கு பகுதியில் ஐ.எஸ் வசமிடம் இருந்து நகரங்களை மீட்கும் முயற்சியில் இராக் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.