ஸ்ட்ரோக்கின் தீவிரத்தை குறைக்கும் ஆஸ்ப்ரின் மருந்து: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

  • 19 மே 2016

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சிறிய ஸ்ட்ரோக் அறிகுறியை உணர்ந்த அடுத்த நொடியில் ஆஸ்பிரின் மருந்தை எடுத்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EyeWire

முக்கிய நேரங்களில் மற்றும் சிறிய ஸ்ட்ரோக்கை சந்தித்த அடுத்த நாட்களில் ஆஸ்பிரின் மருந்தை எடுத்து கொண்டால் பெரிய அளவில் பக்கவாதம் வரும் அபாயம் 80 சதவீதம் குறையவும் எனவும் மேலும் தீவிரம் அடையாமல் தவிர்க்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லான்செட் என்னும் மருத்துவ சஞ்சிகை நடத்திய ஆய்வில் ஆஸ்பிரினின் நன்மைகள் குறைத்து மதிப்பிடபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.