ஈஜிப்ட்ஏர்ஜெட் விமானம் கடலில் விழுந்தது விபத்தா? பயங்கரவாத தாக்குதலா?

ஈஜிப்ட்ஏர்ஜெட் விமானம் கடலில் விழுந்தது விபத்தா? பயங்கரவாத தாக்குதலா?

ராடர் திரைகளில் இருந்து மறைந்த அறுபத்திஆறு பயணிகளுடனான ஈஜிப்ட்ஏர் ஜெட் மத்திய தரைக்கடலில் வீழ்ந்துள்ளது.

ஏ-320 வகையை சேர்ந்த இந்த விமானம் பாரிசில் இருந்து கெய்ரோவுக்கு பயணித்துக்கொண்டிருந்தது.

நடுவானில் திடீரென திசைமாறிய இந்த விமானம் பின்னர் காணாமல் போனதாக கிரேக்க பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. ஆனால், பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு இருக்கலாம் என்று எகிப்திய விமான போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.