ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஆப்கான் குண்டு வெடிப்பில் பலி

  • 20 மே 2016

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சாலையோர குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தாலிபான்களே காரணம் என்கிறார் மாகாண ஆளுநர்

கொல்லப்பட்டவர்களில் ஐந்து சிறார்கள் மற்றும் இரண்டு பெண்களும் அடங்குவர். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் காபூலுக்கு வடக்கேயுள்ள பஹ்லான் மாகாணத்தில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் அந்தப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், அரசபடைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்ற சூழலில், தாலிபான்களே இந்தக் குண்டை அங்கு வைத்துள்ளனர் என மாகாண ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.