ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஈஜிப்ட்ஏர் விமான சிதிலங்களும் பயணிகளின் சடலங்களும் கண்டெடுப்பு

  • 20 மே 2016

கிழக்கு மத்தியதரைக்கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் சிதிலங்களும் மனித சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எகிப்திய கடற்கரையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இவை கண்டெடுக்கப்பட்டிருப்பதாக கிரேக்க மற்றும் எகிப்து அரசுகள் அறிவித்துள்ளன.

பாரிஸிலிருந்து கெய்ரோவுக்கு சென்றுகொண்டிருந்த இந்த விமானம் அறுபத்தி ஆறு பயணிகளுடன் நேற்று வியாழனன்று கடலில் விழுந்தது.