தாயை பற்றி எழுதி நெகிழ வைத்த சிறுவன்

  • 21 மே 2016

எகிப்தில் பள்ளி மாணவன் ஒருவரின் வாழ்க்கைக் கதை சமூக ஊடகங்களில் அதிகமாக பரவி பலரின் மனங்களை நெகிழ வைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை thinkstok
Image caption கெய்ரோ நகரம் - கோப்பு படம்

சீனாய் பகுதியை சேர்ந்த ஒசாமா அகமட் ஹமாத் என்ற மாணவர், அவனுடைய ஐந்தாம் வகுப்பு தேர்வில் தாயை பற்றி எழுதியதுதான் இன்று சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

“என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அவரோடு சேர்ந்து அனைத்தும் இறந்துவிட்டன” என்று இந்த மாணவன் எழுதிய பதிலை பார்த்து மனம் உருகிய ஆசிரியர் அந்த விடைத்தாளை புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

சுன்னி இஸ்லாமின் உயர் அதிகாரியான அல்-அஸாரரின் பெரிய இமாம் பதினொரு வயதான இந்த பையனுக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதோடு, அவனுடைய கல்விக்கான செலவை வழங்கவும் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, கெய்ரோவின் முக்கிய இடங்களில் சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பை மாகாண ஆளுநர் இந்த சிறுவனுக்கு வழங்கியுள்ளார்.