ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றில் முதல்முறையாக தீவிர வலதுசாரி அதிபர்

  • 22 மே 2016

தீவிர வலதுசாரி அதிபர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக ஆஸ்திரியா இன்று ஞாயிற்றுக்கிழமை உருவாகலாம்.

படத்தின் காப்புரிமை Reuters

முதல் சுற்று வாக்கெடுப்பில் உறுதியான வெற்றிபெற்ற சுதந்திர கட்சியின் நோர்பர்ட் ஹேஃபர், முன்னாள் பசுமை கட்சியின் தலைவர் அலெக்ஸாண்டர் வான்டர் பெல்லனை இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் சந்திக்கிறார்.

பாரம்பரிய மைய வலது மற்றும் மைய இடது கட்சிகள் முதல் சுற்று வாக்கெடுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தன.

ஆஸ்திரியா அதிபர் பதவி ஒரு சம்பிரதாய பதவியாக இருந்தாலும், அரசை நீக்குகின்ற அதிகாரத்தை அதிபர் தான் கொண்டிருக்கிறார்.

தான் ஏற்கனவே அதிபராக இருந்தால் குடியேறிகள் நெருக்கடியை கையாண்ட விதத்திற்காக தற்போதைய நிர்வாகத்தை அகற்றியிருப்பேன் என ஹோஃபர் கூறியிருப்பது குறிப்பிடதக்கது.