துருக்கி: ஏ.கே கட்சியின் புதிய தலைவர்

  • 22 மே 2016

துருக்கியின் அதிபராக இருக்கின்ற ரஜெப் தையிப் எர்துவானின் நெருங்கிய ஆதரவாளர் ஆளும் ஏ.கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பினாலி இல்டிரிம் ஏ.கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்பை வழங்கியுள்ளது

பினாலி இல்டிரிம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர் பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

துருக்கியின் அரசியல் சாசனத்தை மாற்றி அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதே அவரது பணி என பினாலி இல்டிரிம் கூறியுள்ளார்.

எர்துவான், அவரது அதிபர் அதிகாரத்தை கணிசமாக அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் குறித்து கருத்து மாறுபட்ட பின்னர், முன்னாள் பிரதமர் அகமட் டவுடேக்லு பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு இந்த நகர்வு வந்துள்ளது குறிப்பிடதக்கது.

குர்து அனத்திற்கு மேல் தொடர்ந்து எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளையும் இல்டிரிம் ஆதரித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை கூடிய கட்சிக் கூட்டத்தில் இல்டிரிம் ஏ.கே கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.