ஜெர்மனி: அரசியல் மற்றும் வெறுப்புக் கொலைகள் அதிகரிப்பு

  • 23 மே 2016
ஐரோப்பாவிலேயே ஜெர்மனிக்கே அதிக அளவில் அகதிகள் வந்தனர் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பாவிலேயே ஜெர்மனிக்கே அதிக அளவில் அகதிகள் வந்தனர்

அரசியல் நோக்கத்துக்காகவும் வெறுப்புணர்வு காரணமாகவும் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர்.

மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகமானவர்கள் ஜெர்மனியில் தஞ்சமடைந்த காலகட்டமான 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காட்டுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு பரவலான வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்பும் அங்கே அதிகரித்துவருகிறது

குறிப்பாக வெறுப்புணர்வால் செய்யப்படும் கொலைகள் திடீரென அதிகரித்துள்ளன.

இக்குற்றங்கள் அனைத்தும் இனவெறி மற்றும் யூதவெறுப்பு அல்லது மக்களை மதரீதியாக இலக்கு வைக்கும் குற்றங்களாகும்.