இந்தியா-இரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்து

  • 23 மே 2016

இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் ஹாசன் ரெளஹானி இடையே முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை VIKAS SWARUP
Image caption இந்தியா-ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

ஒமான் வளைகுடா பகுதியில் உள்ள இந்த திட்டத்துக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை இந்தியா முதலீடு செய்கிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு கடல் வழியாக இரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய வர்த்தக பாதை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதை பாகிஸ்தானைத் தவிர்த்து செல்லவும், இப்பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும் இந்தியாவுக்கு உதவும்.

கடந்த 15 ஆண்டுகளில்இரானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.