ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துனிஷிய மனித உரிமை மீறல்களுக்கான மாற்றக்கால நீதி சாத்தியமா?

ஆங்கிலத்தில் Transitional justice என்றழைக்கப்படும் மாற்ற காலத்துக்கான நீதி பொதுவாக ஒரு நீண்ட,கடினமான வழிமுறை.

அரபு வசந்தம் என்று வர்ணிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்த லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில், இந்த நீதி ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆனால், துனிஷியா, 2013 டிசம்பரில், மாற்ற காலத்துக்கான நீதிச்சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றியது.

இது உலகிலேயே அது போன்ற முதல் சட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த சட்ட்த்தின் கீழ், உண்மை மற்றும் கண்ணிTransitional justice யத்துக்கான ஆணையம் என்ற ஒன்று உருவாக்கப்பட்ட்து.

அந்த ஆணையம் கடந்த 60 ஆண்டு காலகட்ட்த்தில் ஆயிரகணக்கான மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மற்றும் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை பரிசீலித்து வருகிறது.

எனவே துனிஷியா தொடங்கியிருக்கும் இந்த நடவடிக்கை பாவங்களை ஒத்துக்கொண்டு மன்னிப்பு பெறும் மற்றுமொரு வழிமுறையாக முடிந்துவிடுமா அல்லது அதற்கு மேலும் எதையாவது சாதிக்குமா? துனிஸ் நகரிலிருந்து பிபிசியின் ரானா ஜவாத் வழங்கும் காணொளி