நோயாளிகள் மீதான தாக்குதலை ஆவணப்படுத்த ஐ.நாவிடம் கோரிக்கை

  • 24 மே 2016

19 நாடுகளில் மருத்துவ துறை தொழிலாளர்கள் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் அளவை, ஒரு புதிய அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

மோதல் நடக்கும் இடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் கூட்டணி (Safeguarding Health in Conflict Coalition) என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பேசுகையில், சமீப காலத்தில் வேண்டுமென்றே அல்லது தாறுமாறான வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் கொல்லப்படுகிறார்கள், சுகாதாரக் கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது, எண்ணிலடங்கா பொது மக்களுக்கு இன்றியமையாத மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன என்று கூறியது.

30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்த இந்தக் குழு முன் வைத்துள்ள பரிந்துரைகளில், பல்வேறு நாடுகளின் அரசுகள் இந்த செயல்களை தடுப்பதில் தோல்வியடையும் போது, தாக்குதல்களை ஐ.நா முறையாக ஆவணப்படுத்தவேண்டும் என்ற கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த செயல்களை விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்குகிறது.

(கூட்டணியில் உள்ள, இன்ட்ரா ஹெல்த் இன்டர்நேஷனலை சேர்ந்த லாரா ஹொம்கி பேசும்போது,தாக்குதல்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தோல்வி தான், தண்டனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சங்கலித்தொடரான விளைவுகளை தூண்டியுள்ளது என்றார்.)