வல்லுநர்கள் அவையின் தலைவராக அயத்துல்லா அகமது ஜனாடி தேர்வு

  • 24 மே 2016

இரானில் 89 வயதாகும் அயத்துல்லா அகமது ஜனாடி என்ற கடும்போக்கு பழமைவாதத் தலைவர் பலம் பொருந்திய வல்லுநர்கள் அவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை FARS

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த தேர்தலில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில கடும்போக்குவாதிகளில் இந்த மூத்த மத குருவான ஜனாடியும் ஒருவர் ஆவார்.

இந்த மதகுருக்கள் அடங்கிய அவைதான் இரானின் அதி உயர் தலைவரை நியமிக்கிறது. மேலும் இந்த அவைக்குத்தான் அதி உயர் தலைவரை பதவி நீக்கம் செய்யவும், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அதிகாரம் பெற்றிருக்கிறது.

பிப்ரவரியில் இந்த அவைக்கு நடந்த தேர்தலின் போது நடந்த நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில், நாட்டின் சீர்திருத்த மற்றும் மிதவாத தலைவர்கள் தலைநகர் டெஹ்ரானில் பெரும் வெற்றியையும் மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.