குர்து மக்கள் கொல்லப்பட்டதற்கு ஐநா விசாரணை கோருகிறது

குர்து மக்கள் கொல்லப்பட்டதற்கு ஐநா விசாரணை கோருகிறது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்து ஆயுதபாணிகளுடன் சண்டையிட்டுவரும் துருக்கிய பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வந்த ஆதாரங்களை புலனாய்வு செய்ய ஐநா விரும்புகிறது.

சிஸ்ரே நகரில் நூற்று அறுபது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதில் ஒற்றை சம்பவம் ஒன்றில் நூறு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வருட முற்பகுதியில் இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகின்றது.

துருக்கிய வெளியுறவு அமைச்சு இதனை மறுக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.