ரஷ்ய ஹெலிகாப்டர்களை கொளுத்தியது ஐ.எஸ் படையா?

  • 24 மே 2016
படத்தின் காப்புரிமை AFP

கடந்த வாரம் மத்திய சிரியாவில் இருக்கும் இராணுவ விமான தளத்தில் நான்கு ரஷ்ய ஹெலிகாப்டர்களும், 20 லாரிகளும் தீயிட்டு கொளுத்தப்படும் செயற்கைகோள் புகைப்படங்களை பிபிசி வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்களை வெளியிட்ட அமெரிக்க உளவு நிறுவனமான ஸ்ட்ராட்ஃபோர், இந்த அழிப்புக்கு பின் ஐ.எஸ் ஆயுதக்குழுவினர் இருக்கலாம் என அதிகமாக சந்தேகங்கள் இருப்பதாக கூறியுள்ளது.

ஸ்ட்ராட்ஃபோர் நிறுவனத்தின் ஆய்வாளர் சிம் டாக், இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இது தற்செயலாக நடந்த விபத்தல்ல என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐ.எஸ் செய்தி நிறுவனம் இந்த சம்பவத்திற்கு நேரடியாக பொறுப்பேற்கவில்லை என்றாலும், வெறும் ஹெலிகாப்டர்களையும், லாரிகளையும் கொளுத்தியதாக சொல்கிறார்கள்.

விமான தளத்தில் ஏற்பட்ட தீ அங்கிருந்த எண்ணெய் தொட்டியிலும் பரவி இருக்கலாம் என சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இவ்விவகாரம் குறித்து மாஸ்கோவிலிருந்து எவ்வித கருத்தும் இதுவரை வெளிவரவில்லை.