மோசடி புகார்: பி எஸ் ஐ வங்கியை மூட சுவிட்சர்லாந்தின் நிதி அதிகாரிகள் உத்தரவு

  • 24 மே 2016

மலேசிய அரசு முதலீட்டு நிதியிலிருந்து நான்கு பில்லியன் டாலர் மோசடி செய்த புகாரில் தொடர்புடைய பி எஸ் ஐ வங்கியை மூட சுவிட்சர்லாந்தின் நிதி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

குற்றங்களைத் தடுக்க தவறியதாக சந்தேகிக்கப்படும் பி.எஸ்.ஐ என்ற இந்த தனியார் வங்கி மீது குற்ற விசாரணை நடத்த தொடங்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், சிங்கப்பூரில் உள்ள இந்த வங்கியின் ஒரு கிளையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மலேசிய பிரதமர் நஜிப் ரசக் எம் டி பி நிதியம் என்ற நிறுவனத்திலிருந்து தனது சொந்த வங்கி கணக்குக்கு பல கோடிக்கணக்கான டாலர்களை திருப்பிவிட்டுக்கொண்டார் என்று எழுந்த குற்றச்சாட்டில் மலேசிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.