தாலிபான் புதிய தலைவர், துணை தலைவர்கள் நியமனம்

  • 25 மே 2016

தாலிபான் தலைவர் முல்லா அகத்தர் மன்சூர் , பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களில், ஆப்கான் தாலிபான், ஒரு புது தலைவரை நியமித்துள்ளதாக கூறியுள்ளது.

Image caption , ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதா,தாலிபானின் புதிய தலைவர்

தாலிபானின் பிரதிநிதி, ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதாவை இயக்கத்தின் புதிய தலைவர் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முல்லா ஹைபத்துல்லா, முல்லா அகத்தர் மன்சூருக்கு துணைத் தலைவரகவும், தாலிபான் நீதித்துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர்.

காபூலில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட வலையமைப்பைச் சேர்ந்த் சிராஜுதீன் ஹக்கானி மற்றும் , தாலிபானின் நிறுவனர் முல்லா ஓமரின் மகனான முகம்மது யாகூப் ஆகியோர் புதிய துணை தலைவர்களாக அறிவிக்கபட்டுள்ளனர்.

முல்லா மன்சூரின் இறப்பை இப்போது தான் முதல் முறையாக தாலிபான் ஒப்புக்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பாகிஸ்தானில் முல்லா மன்சூர் ஆளில்லா விமானத்தால் தாக்குதலுக்கு ஆளான இடம் .
காபூல் நகரத்தில் தாக்குதல்

இதனிடையே, ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் பத்து நீதிமன்ற ஊழியர்களை கொன்றார் என்றும் மேலும் நான்கு நபர்கள் அத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என்றும் ஆப்கானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த குண்டுதாரி வார்தாக் பிரதேசத்திற்கு செல்லும் பேருந்தை குறிவைத்ததாக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பி பி சியிடம் தெரிவித்தார்.