மழை வெள்ளத்தில் அதிகாரியை முதுகில் சுமந்த பாதுகாவலர்: வியட்நாம் மக்கள் கோபம்

  • 26 மே 2016

வியட்நாமின் ஹனாய் நகரில் மழை வெள்ளத்தில் பாதுகாவலர் ஒருவர் அரசு அதிகாரி ஒருவரை முதுகில் தூக்கிக் கொண்டு செல்லும் புகைப்படம் இணையத்தில் பரவி மக்களிடையே சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

முதலில் அதிகாரியின் கார் கதவிற்கும் அலுவலகத்தின் படிகளுக்கும் இடையில் இருக்கை ஒன்று போடப்பட்டது ஆனால் அது போதமையால் அந்த பாதுகாவலர் முன்னே வந்து தனது கால் சராயை சுருட்டிக் கொண்டு, அந்த அதிகாரியை அலுவலகத்திற்கு சுமந்து சென்றார்.

இதை கண்டு கோபம் அடைந்த குடிமக்கள் வியட்நாமின் முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மழை நீரில் நடந்து செல்லும் புகைப்படங்களை பதிவிட்டு தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

முன்னாள் தலைவர் ஹோ சி மின் இதை பார்த்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார் என ஒருவர் அதில் கருத்து பதிவிட்டுள்ளார்.