சீனா: ஹிரோஷிமாவை விட நான்ஜிங் நகரம் அதிகமாக நினைவுகூரத்தக்கது

  • 27 மே 2016

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதல் ஹிரோஷிமாவை விட அதிகமான நினைவுகூரத்தக்க மதிப்பு பெற்றுள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Xinhua
Image caption கோப்பு படம்

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் வருகை புரிந்ததற்கு சீனா இந்த பதிலை வழங்கியுள்ளது.

நான்ஜிங் படுகொலைக்கு காரணமானோர் அதற்கான பொறுப்பை ஒருபோதும் தட்டிக் கழிக்க கூடாது என்று சீன வெறியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption நான்ஜிங் நகரம்

1937 ஆம் ஆண்டு நான்ஜிங் நகரத்தை கைப்பற்றியபோது பல்லாயிரக்கணக்கானோரை ஜப்பான் படைபிரிவுகள் கொன்றன.

சீனா, தென் கொரியா உள்பட கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகள் ஜப்பான் இரண்டாம் உலகப்போரின்போது செய்த செயல்களுக்குஇன்னும் முறையாக வருந்தவில்லை என்று நம்புகின்றன.