விருந்தில் பங்கேற்ற 30 மாணவர்களுக்கு தலா 99 சாட்டையடிகள்

  • 27 மே 2016

ஒரு விருந்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட இரான் மாணவர்கள் அறநெறி பாதுகாவல் போலீசாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் 99 சாட்டையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை MEHR

அதிக எண்ணிக்கையிலான மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தியிருந்தார்கள். அவர்கள் அநாகரீகமான நடத்தையில் ஈடுப்பட்டிருந்தனர் என்று காஸ்வின் நகரை சேர்ந்த அரச வழங்கறிஞர் கூறியதாக மேற்கோள்காட்டப்படுகிறார்.

மது குடிப்பதும், ஆண்-பெண் இணைந்து நடனமாடுவதும் இஸ்லாமிய குடியரசான இரானில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிடிபடுவோர் தண்டிக்கப்படுவது பொதுவானதே என்றாலும் ஒரு வழக்கில் 30 பேர் தண்டிக்கப்படுவது வழக்கத்திற்கு சற்று மாறானது.