சாலையை சுத்தமாக வைத்திருக்க கழுதைகளுக்கு நாப்கின்

  • 27 மே 2016

வட கிழக்கு கென்யாவில் உள்ள ஒரு மாகாணத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை சுத்தமாக வைத்திருக்க அந்த சாலையில் பயணிக்கும் கழுதைகளுக்கு நாப்கின்கள் மாட்டப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty

வாஜிர் பகுதியை சேர்ந்த கழுதை உரிமையாளர்கள் இனி கட்டாயம் தங்கள் விலங்குகளுக்கு பின்னால் ஒரு பையை மாட்டி வைக்க வேண்டும்.

கழுதைகள் போடும் கழிவுகள் இந்தப் பையில் நேரடியாக விழும் வண்ணம் இந்தப் பைகள் அமைந்திருப்பதால், சாலைகளில் அந்தக் கழிவுகள் விழாமல் சுத்தமாக இருக்கும்.

இது அந்த மாகண வரலாற்றிலே அமைக்கப்பட்ட முதல் தார் நெடுஞ்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜிர் கழுதைகள் எந்த அளவுக்கு அசுத்தமானவையாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற ஒரு விதி கொண்டுவரப்பட்டிருக்கும் என்று கென்யா மக்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகிறார்கள்.