மண்டேலா உயிலில் இடம் பிடித்த கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள்

  • 27 மே 2016
படத்தின் காப்புரிமை AP

தென் ஆப்ரிக்காவின் மறைந்த முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உயிலில் குறிப்பிடப்பட்ட பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவரது சொத்திலிருந்து நிதி வழங்கும் ஒரு சிறிய நிகழ்வு நடைபெற்றது.

மண்டேலாவின் கார் ஓட்டுநர், வீட்டில் பணிபுரிந்தோர் மற்றும் அவருடைய தனி உதவியாளர் ஆகியோரும், மொத்தம் வழங்கப்பட்ட 1.4 மில்லியன் டாலர் நிதியில் பங்குத் தொகைகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டன.

மேலும், மண்டேலாவின் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை சொத்துக்களை தனிப்பட்ட முறையில் பெற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.