சீனா: வயது முதிர்ந்த பெற்றோரை கவனிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை

  • 28 மே 2016

உடன்பிறந்தவர்கள் இல்லாத தொழிலாளர்கள் தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஊதியத்துடன் கூடிய 20 நாட்கள் விடுமுறையை சீனாவின் மாகாணம் ஒன்று வழங்கயிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption உடன்பிறந்தோர் இல்லாத தொழிலாளர்கள் பெற்றோரை கவனிக்க உதவும் வகையில் ஆண்டுதோறும் ஊதியத்துடன் கூடிய 20 நாட்கள் விடுமுறை.

சீனா நடைமுறைப்படுத்திய ஒரு குழந்தை திட்டத்தால் மில்லியன் கணக்கான குடும்பங்களில் வயது முதிர்ந்த பெற்றோர் இருவரையும் அவர்களின் ஒரே ஒரு குழந்தை மட்டுமே கவனிக்க வேண்டிய நிலை உருவாகியது. வரவேற்கப்படாத விளைவுகளில் ஒன்றான இந்த நிலைமையின் தீர்வுக்கு இந்த மாகாணத்தின் தீர்மானம் உதவும்.

அறுபது வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இருந்தாலோ அல்லது பெற்றோர் மருத்துவமனையில் இருந்தாலோ ஹெனான் மாகாணம் மேலதிக விடுமுறைகளை வழங்கவிருக்கிறது.

சீனாவில் மிக விரைவாக வளர்ந்து வரும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பை சமநிலை படுத்துவதற்கு உதவும் வகையில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை சீனா கடந்த ஆண்டு தான் நீக்கியது குறிப்பிடதக்கது.