ஜப்பானிய தீவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்

  • 28 மே 2016
படத்தின் காப்புரிமை AFP

ஜப்பானிய தீவான ஓக்கினாவவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, கொலை செய்த குற்றம் தொடர்பாக முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த ஜப்பானிய தீவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கடற்படை வீரர் தற்போது இராணுவத்திலிருந்து விலகி சிவிலியனாக பணி செய்து வருகிறார்.

இம்மாதம் அவர் கைதான நிலையிலும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்ததன் விளைவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா இந்த சம்பவத்தை அடுத்து, இப்பகுதியில், ஒற்றுமை மற்றும் துக்கத்தை அனுசரித்து வெளிப்படுத்த அறிவித்திருக்கும் 30 நாள் காலகட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஓகினாவா தீவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் தளபதி லாரன்ஸ் நிக்கோல்சன், இந்த தளத்தில் நடைபெறவிருந்த அனைத்து பண்டிகைகள், கொண்டாட்டங்கள் மற்றும் இசை கச்சேரிகள் ஒத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.