சான் டியாகோவில் நடைபெற்ற ட்ரம்ப் பிரச்சார கூட்டத்தில் சலசலப்பு

  • 28 மே 2016
படத்தின் காப்புரிமை Reuters

கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை விலக்க கலவர தடுப்பு போலீஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் பிரசாரம் நடைபெற்ற மாநாட்டு மையத்தின் தெருக்களில் ஆர்பாட்டக்காரர்கள் மெக்ஸிகன் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி நடந்தார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

மெக்ஸிகன் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் சான் டியாகோ நகரம் அமைந்துள்ளது.

தான் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க மெக்ஸிகோ - அமெரிக்க எல்லைப் பகுதியில் சுவர் கட்டப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.