சலவைத்தூள் விளம்பரம்: மன்னிப்பு கோரியது சீன நிறுவனம்

  • 29 மே 2016
படத்தின் காப்புரிமை QIAOBI

சலவைத்தூள் விளம்பரம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்ட சீன நிறுவனம், அந்த விளம்பரம் எழுப்பிய இணைய சர்ச்சையை அடுத்து, மன்னிப்பு கோரியிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் விளம்பரம் இனவாதத்தைத் தூண்டுவதாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கியோபி என்ற இந்த சலவைத் தூள் தயாரிக்கும் நிறுவனம் , தான் இன ரீதியான பாரபட்சத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் கண்டிப்பதாகவும் கூறியது.

பல நாட்களுக்கு முன்னர் அது வெளியிட்ட ஆரம்பகட்ட கருத்துக்களில், இந்த விளம்பரத்தை வெளியிடும்போது, இனவாதப் பிரச்சனை தங்கள் மனதில் படவில்லை என்றும் , ஆனால் வெளிநாட்டு விமர்சகர்கள், அதிகமான அளவில் உணர்ச்சிகரமாக இதை அணுகுகிறார்கள் என்றும் கூறியிருந்த்து.

அந்த விளம்பரத்தில் கறுப்பின ஆண் ஒருவரது தலை முதலாக சலவை இயந்திரத்துக்குள் திணிக்கப்பட்டு, சலவை இயந்திரம் இயங்கிய பின், வெள்ளை நிற ஆசியராக வெளியே வருவதாக சித்தரித்திருந்தது.