வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள்

  • 29 மே 2016

ஜெர்மனி அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் அம்மையார் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வார்.

படத்தின் காப்புரிமை Reuters

முதல் உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதல்களில் வெர்டுன் போர் ஒன்றாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

1916 ஆம் ஆண்டு பிரான்சின் வட கிழக்கு பகுதியில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் ஏறக்குறைய மூன்று இலட்சம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வின்போது இருதரப்பு வீரர்களின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ள கல்லறைகளில் இரு நாட்டு தவைலர்களும் மலர்வளையங்கள் வைத்து மரியாதை செலுத்துவர்.