உக்ரேனில் முதியோர் வாழ்ந்த குடியிருப்பில் தீ

  • 29 மே 2016

உக்ரேன் தலைநகர் கீவிற்கு அருகில் முதியோர் வாழ்ந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளனர்.

அவசர சேவைகள் 18 பேரை மீட்டுள்ளதாகவும், அதில் தீக்காயமுற்ற ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அருகிலுள்ள லிடோசிகி கிராமத்தை சேர்ந்த 35 பேர் வாழ்ந்து வந்த தனியாருக்கு சொந்தமான தற்காலிக குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது என்று அவசர சேவைகளின் அறிக்கை தெரிவிக்கிறது.