பஹ்ரைனின் எதிர்கட்சி தலைவரின் தண்டனை காலத்தை அதிகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

  • 30 மே 2016

பஹ்ரைன் எதிர்க்கட்சி தலைவர் ஷேக் அலி சல்மானுக்கு வழங்கப்பட்டிருந்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை ஒன்பது ஆண்டுகளாக அதிகரித்து பஹ்ரைன் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை afp getty

ஷேக் சல்மான் வன்முறையை தூண்டியதாக கடந்த ஆண்டு குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

அந்த தண்டனை காலம் மனித உரிமைகள் குழுக்களாலும், அமெரிக்கா மற்றும் இரானாலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

படத்தின் காப்புரிமை AFP

ஷேக் சல்மான் பஹ்ரைனின் முக்கிய ஷியா எதிர்க்குழுவான அல்-விஃபாக்கை வழிநடத்துகிறார்.

திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாதது, ஆத்திரமூட்டுவது என்று கூறியுள்ள இந்த அல் விஃபாக் குழு, இது பஹ்ரைனில் அரசியல் நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.