இரவில் நீந்திய பெண்ணைத் தாக்கிய முதலை

  • 30 மே 2016

வட ஆஸ்திரேலியாவில், நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண்ணைக் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty

குயின்ஸ்லேண்ட் பகுதியில் டெய்ன்ட்ரீ தேசிய பூங்காவில் இடுப்பளவு தண்ணீர் உள்ள பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பின்னிரவு நேரத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது இச் சம்பவம் நடந்தது.

அவருடன் இருந்த நண்பர், அந்தப் பெண்ணை முதலையிடமிருந்து காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. `ஒரு முதலை என்னைப் பிடித்துவிட்டது' என்று அந்தப் பெண் அபயக்குரல் எழுப்பியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

அதன்பிறகு, அவரது நண்பர் தகவல் கொடுத்த பிறகு போலீசார் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

உப்பு நீரில் இருக்கக் கூடிய ஐந்து மீட்டர் நீளமுள்ள முதலையை, அந்தப்பகுதியில் சமீப வாரங்களில் பார்க்க முடிந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு, கடந்த 2009-ம் ஆண்டு இதேபோல், ஒருவர் முதலையால் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.