ஐஎஸ் அமைப்புக்கு எதிரான இராக்கிய இராணுவத்தின் இறுதித்தாக்குதல்?

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான இராக்கிய இராணுவத்தின் இறுதித்தாக்குதல்?

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து பலூஜா நகரை மீட்பதற்காக மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்திருப்பதாக இராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது.

இராக் தலைநகர் பாக்தாதிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் பலூஜா நகரம் இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பலூஜா நகரம் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இராக்கிய இராணுவத்தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பலூஜா நகரில் சிக்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பொதுமக்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

போரின் முன்னரங்கிலிருக்கும் பிபிசி செய்தியாளர் வழங்கும் பிரத்யேக செய்தித்தொகுப்பு.