சர்வதேச கால்பந்து வீரர் கடத்தல்

  • 30 மே 2016

மெக்ஸிகோவில், கடத்தப்பட்ட சர்வதேச கால்பந்து வீர்ர் ஆலன் புலிடோவை போலீசாரும், ராணுவத்தினரும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆலன் புலிடோ

ஞாயிற்றுக்கிழமையன்று, தனது சொந்த ஊரான சியுதத் விக்டோரியாவுக்கு அருகில் ஒரு விருந்தில் பங்கேற்றுவிட்டு, தனது காரில் திரும்பும்போது, முகமூடி அணிந்த சிலர் அவரது காரை சூழ்ந்து, அவரைக் கடத்திச் சென்றனர்.

போதை மருந்து கடத்தல் தொர்பான கும்பலால் மெக்ஸிகோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்படுகிறார்கள்.

ஆலன் விளையாடும் அணியான ஒலிம்பியாகோஸ், கிரீன் கிளப் சார்பில் இந்தக் கடத்தல் குறித்துக் கூறும்போது, தங்கள் வீர்ர் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.