ஜெர்மனியில் கடும் மழை: 4 பேர் பலி

  • 30 மே 2016

தெற்கு ஜெர்மனியில், பெய்த கடும் மழையால் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தார்கள்.

படத்தின் காப்புரிமை
Image caption ஜெர்மனியில் வெள்ளம் (கோப்புப்படம்)

பேடன் – வுட்ரெம்பெர்க்கில் உள்ள பிரவுன்ஸ்பச் நகரில் ஆற்றின் கரை உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு, கடைகளின் கதவுகள் மீது மோதின. அவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட கார்களுக்குள்ளும் சிலர் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீட்புப் படையினர் மீட்டனர்.

மாதக்கணக்கில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்துவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.