ஃபலூஜா மீதான இறுதி தாக்குதலில் அரசப் படைகள் முன்னேற்றம்

  • 30 மே 2016

ஃபலூஜா நகரின் மீதான இறுதி தாக்குதல் என்று இராக் அரசப்படையினர் தெரிவிக்கும் படை நடவடிக்கையில் அவர்கள் முன்னேறியிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அந்த நகரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இன்று காலையில் இருந்து கடும் மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் இந்த நகரத்தில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

தற்போதைய தாக்குதல் அரசின் தீவிரவாத எதிர்ப்பு அதிரடி படையினரின் தலைமையில் அமெரிக்கா வழிநடத்தும் படைப்பிரிவுகளின் பலத்த விமானத் தாக்குதல் ஆதரவோடு நடைபெற்று வருகிறது.

நகரத்தை சுற்றி வளைக்கவும், பொருட்களின் விநியோக பாதைகளை துண்டிக்கவும், ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பி செல்வதற்கான வழிகளை தடுக்கவும் ஃபலூஜா நகரின் மூன்று பக்கங்களிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.