பொக்கோ ஹரம் அமைப்பிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் நைஜர் மற்றும் நட்பு நாடுகள்

  • 30 மே 2016

நைஜீரிய தீவிரவாத அமைப்பான பொக்கோ ஹரம் அமைப்பிற்கு எதிரான முக்கிய தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டு வருவதாக நைஜர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

நைஜர் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹசோமி மசாவ்டூ பிபிசியிடம் கூறுகையில், அண்டை நாடுகளின் படைகள் முழுமையாக ஒருங்கிணைந்து இஸ்லாமிய போராளிகளை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் நைஜீரிய நாட்டிற்கு உள்ளதாகவும் இப்போரில் தலையிட நைஜர் மற்றும் அதன் நட்பு நாடுகள் தயாராக உள்ளன என்றும் அடிக்கடி எல்லை கடந்த தாக்குதல்களில் ஈடுபடும் பொக்கோ ஹரமிற்கு பதிலடி கொடுப்பதற்கான கூட்டு திட்டத்தில் சாட், கேமரூன், நைஜீரியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.