சீனரை குறிவைத்து பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு

  • 30 மே 2016

சீன குடிமகன் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக தோன்றுகின்ற குண்டுவெடிப்பில் குறைந்தது ஒருவர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தென் பகுதி நகரான, கராச்சியில், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் அந்த சீனரின் உள்ளூர் ஓட்டுநர் காயமடைந்தார்.

அந்த இடத்தில் ஒரு கடிதத்தை கண்டெடுத்தாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்த பிராந்தியத்தின் இயற்கை வளங்களில் “வெளிநாட்டு கட்டுப்பாடு” என்று அது குறிப்பிடும் கட்டுப்பாட்டை இந்த கடிதம் கண்டித்துள்ளது.

கடந்த ஆண்டு மின்னாற்றல் உற்பத்தி திட்டங்கள் மற்றும் முக்கியமானதொரு நெடுஞ்சாலை கட்டுமானம் உள்பட 46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான பெரியதொரு முதலீட்டு திட்டத்தை பாகிஸ்தானில் நடத்தபோவதாக சீனா அறிவித்தது..