ஃபலூஜா நகர் அரச படைகள் வசம் விழுகிறது?

ஃபலூஜா நகர் அரச படைகள் வசம் விழுகிறது?

இராக்கின் ஃபலூஜா நகரை மீட்பதற்கான தமது சண்டையில் அரச படையினர் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக நகரை அண்மித்த பகுதிகளை கைபற்றியுள்ள இராணுவத்தினர், நகருக்கு தெற்கேயுள்ள புறநகர் பகுதியை நெருங்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக இந்த நகரம் ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அந்த நகருக்குள் சிக்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பொதுமக்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

ஐ எஸ் அமைப்பினர் அங்கிருந்து பொதுமக்களை வெளியேறவிடாமல் தடுக்கின்றனர் என தப்பித்து வந்தவர்கள் கூறுகிறார்கள்.

வெளியேற நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஐ எஸ் எச்சரித்ததாக தப்பிவந்த குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த பிபிசியின் கானொளி.