கொரில்லாவை சுட்டு விடுவது என்ற முடிவு சரியே: சின்சினாட்டி வனவிலங்கு பூங்கா இயக்குனர்

  • 31 மே 2016

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்கொன்று வைக்கப்பட்டிருந்து அடைப்பில், நான்கு வயது சிறுவன் ஒருவன் விழுந்து விட்டதால், அந்த கொரில்லாவை சுட்டு விடுவது என்ற தனது முடிவில் நிலைத்து நிற்பதாக இந்த பூங்காவின் இயக்குனர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை
Image caption கொரில்லா (கோப்பு படம்)

ஹாரம்பே என்ற அந்த மேற்கத்திய தாழ்நில சில்வர்பேக் கொரில்லா கிளர்ச்சி மற்றும் குழப்பம் அடைந்ததாகவும் இருந்ததால், சிறுவனின் உயிரை காப்பாற்ற தனது முடிவு உதவியதாக சின்சினாட்டி பூங்காவின் இயக்குனர் தெய்ன் மெய்னார்ட் தெரிவித்துள்ளார்.

கொரில்லாவை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இணைய மனுவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இச்சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோரே பொறுப்பு கூற வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பகல் வேளையில், இந்த நான்கு வயதுச் சிறுவன் இந்த கொரில்லா வைக்கப்பட்டிருந்த அடைப்பைச் சுற்றி போடப்பட்டிருந்த தடுப்பு வேலியினூடாக ஊர்ந்து நுழைந்து பின்னர் அதற்குள்ளிருந்த அகழியில் விழுந்து விட்டான்.