காப்புரிமை தொடர்பாக க்ரப்ட்வெர்க் இசைக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

  • 31 மே 2016

ஜெர்மனியின் உச்சநீதிமன்றம் பிரபல மின்னணு இசைக்குழுவான க்ரப்ட்வெர்க், அவர்களது மெட்டு ஒன்றிலிருந்து இரண்டு விநாடி இசையை, தனது பாடல் ஒன்றில் பயன்படுத்திய ஒரு ஹிப் ஹாப் இசைக் கலைஞருக்கு எதிராகத் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

பயன்படுத்தும் உரிமை மீதான தாக்கம் சொற்பமானது என்னும் பட்சத்தில், காப்புரிமையைப் பெற்றிருப்பவரின் நலன்களைக் காட்டிலும், கலைச் சுதந்திரம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

க்ரப்ட்வெர்க் குழு, தனது 1977ம் ஆண்டு வெளியான , ‘மெடல் ஆன் மெடல்’ இசைத்தொகுப்பில் உள்ள ட்ரம் இசைத் துண்டு ஒன்றை சபரினா செட்லூர் என்ற கலைஞர், அவரது பாடலான, ‘ஒன்லி மி’யில் பயன்படுத்தியதற்காக கடந்த 20ஆண்டுகளாக போராடி வருகிறது.