ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நவீன அடிமைகளை நினைவூட்டும் செல்ஸி மலர்காட்சி

  • 31 மே 2016

உலக அளவில் சுமார் நான்குகோடியே அறுபது லட்சம் பேர் அடிமைகளாக வாழ்வதாக Walk Free Foundation என்கிற தொண்டுநிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பலவந்தத் திருமணம் செய்விக்கப்படுபவர்கள், பாலியல் தொழிலில் விற்கப்படுபவர்கள் மற்றும் அடிமைக்குடும்பத்தில் பிறப்பவர்களும் இதில் அடங்குகிறார்கள்.

இங்கே லண்டனின் உலகப் புகழ்பெற்ற செல்ஸி மலர்க்காட்சியில் நவீனகால அடிமைத்தனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு கண்காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.

தான்சானியாவில் பிறந்தவரும் பூங்கா வடிவமைப்பாளருமான ஜூலியட் செர்ஜெண்ட் லண்டனின் செல்ஸி மலர்க்காட்சியில் உருவாக்கியிருக்கும் கண்காட்சியின் பிரதான நோக்கம் நம் சமகால அடிமைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

உலகம் முழுக்க பல லட்சம் பேர் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒருவகையான அடிமைத்தனத்தில் சிக்கும் ஆபத்து நிலவுகிறது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுமையும் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அது இன்னும் ஒழியவில்லை. மாறாக பல்வேறு மறைமுக வழிகளில் அது நீடிப்பதாக அது கூறுகிறது.

நம் சமகால நவீன அடிமைத்தனத்தின் பன்முக பரிமாணத்தை பார்வையாளர்களுக்கு புரியவைப்பதே தம் நோக்கம் என்கிறார் ஜூலியட்.