இந்தோனேஷிய புகையிலை: விஷமாகும் குழந்தைகள் வாழ்வு

உலகில் புகையிலை உற்பத்தி செய்யும் ஐந்தாவது பெரிய நாடு இந்தோனேஷியா.

அதன் உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை பிபிசி பார்த்தது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆபத்தான சூழலில் வேலை செய்வதாக ஹுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிலிப் மொரிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கான புகையிலை பயிரிடும் பண்ணைகளில் கூட குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள்.

இதை நேரில் சென்று ஆய்வு செய்தது பிபிசி.