கிளர்ச்சியாளர்கள் சரணடைய புருண்டியின் அதிபர் இருவார கெடு

  • 2 ஜூன் 2016

புருண்டியின் தலைநகருக்கு தெற்கே உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் சரணடைய புருண்டி அதிபர் பியர் குருன்சிசா இரண்டு வாரங்கள் கெடு வழங்கியுள்ளார்.

அவர்கள் சரணடையாவிட்டால், அவர்கள் மீது ஆயுத பலத்தை பயன்படுத்த போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முந்தைய எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்டதை இத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அந்த அடக்குமுறையின் போது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் அரங்கேறியதாக மனித உரிமை குழுக்களால் கூறப்பட்டது.

குருன்சிசா மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு சர்ச்சைக்குரிய முறையில் போட்டியிடப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து ஓராண்டுக்கு முன்பு தலைநகர் புஜூம்புராவுக்கு ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முகாம்பாவில் தற்போதைய கிளர்ச்சி தொடங்கியது.