ஐரோப்பிய பிரமுகர்கள் பிரிட்டன் மக்களுக்கு அனுப்பிய காதல் கடிதம்

ஐரோப்பிய பிரமுகர்கள் 140-க்கு மேலானோர் பிரிட்டன் மக்களுக்கு ‘காதல் கடிதம்‘ என்று அவர்கள் குறிப்பிடுகின்ற கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption இத்தாலிய நடிகை இஸபெல்லா ரோசிலினி

பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதற்கு வாக்களிக்க வேண்டுமென அக்கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கடிதத்தில் விஞ்ஞானிகள், விளையாட்டு நட்சத்திரங்கள், நடிகர்கள், ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்கின்ற பிரிட்டன் மக்களின் உரிமையை அவர்கள் மதிப்பதாகவும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption திரு. அர்சென் வென்ஜர்

அவர்கள் ஜக்கிய ராஜியத்தோடு உறவால் பிணைந்திருப்பது உடன்பாடுகளால் அல்ல. மாறாக வியந்து பாராட்டுதலாலும், நேசத்தாலும் என்பதை அழுத்தமாக இக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் கால்பந்து மேலாளார் அர்சென் வென்ஜர், இத்தாலிய நடிகை இஸபெல்லா ரோசிலினி, ஸ்வீடனின் ‘அப்பா‘ பாப்பிசை குழுவின் பிஜென் உல்வியுஸ் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோரில் சிலர் ஆவர்.