1960 இந்தோனேசியப் படுகொலையை நியாயப்படுத்துகிறார் அமைச்சர்

  • 2 ஜூன் 2016

இந்தோனேஷியாவில் 1960ல் ராணுவ ஆதரவு பெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கொல்லப்பட வேண்டிய நபர்களே என்று இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரியாமிஸாட் ரியாகுடு தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

கொலைகளை மீண்டும் ஆய்வு செய்ய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கியபிறகு கூட்டப்பட்ட கூட்டத்தில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

சமீப வாரங்களில் இந்தோனேஷிய நாட்டின் கருப்பு அத்தியாயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சம்பவம் குறித்து தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.

1965 இல் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின், கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு, குறைந்தது அரை மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.