முற்றுகையிடப்பட்ட சிரியா பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை தொடங்க மேற்கத்திய நாடுகள் கோரிக்கை

  • 2 ஜூன் 2016

சிரியா அரசுடன் அதிகரித்து வரும் சர்வதேச சமூகத்தின் பொறுமையிழப்பின் அடையாளமாக, முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் வான் வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கத் தொடங்கிட ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption முற்றுகையிடப்பட்ட சிரியா பகுதிகள் (கோப்பு படம்)

பரந்த மனிதாபிமான உதவிக்கான வழிவகைகளை ஆதரிக்க சிரியா அரசு தவறியது குறித்து பரிசீலனை செய்ய ஒரு அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை இந்த நாடுகள் கோரியுள்ளன.

மிகவும் நம்பிக்கையூட்டும் விதமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு, அது நெருங்கி வரும் வேளையில் அவற்றை திரும்ப அனுப்புவது ''சர்வதேச சமூகத்தின் முகத்தில் காரி உமிழ்வதாகும்'' என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளரான ஜான் கிர்பி கூறினார்.

நான்கு வருடங்களாக சிரியா அரச படைகள் சூழ்ந்திருந்த தரயா நகரை, நேற்று (புதன்கிழமை) ஒரு தொடரணி சென்றடைந்தது. ஆனால், அது எந்த உணவையும் எடுத்துச் செல்லவில்லை.